இ.போ.ச யாழ்.சாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்..!!!


இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த விபத்து சம்பவத்தின் போது , இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மீது அங்கிருந்த சிலர் தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர்.

அதில் காயமடைந்த சாரதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனைய தாக்குதலாளிகளையும் பொலிஸார் கைது செய்ய வேண்டும் எனவும் , தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளை நுழைய விடாது தடுப்புக்களை போட்டுள்ளனர். அதனால் வெளி மாவட்ட பேருந்துகள், பேருந்து நிலையத்தினுள் நுழைய முடியாததால் , வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை திடீரென இன்றைய தினம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் , தூர இடங்களுக்கு வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என பலரும் அவதிக்கு உள்ளானார்கள்.






Previous Post Next Post


Put your ad code here