உரிமையாளரை தேடி பொலிஸ் நிலையம் சென்ற நாய்..!!!


வீடொன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தேடி அவர் வளர்த்த நாய் பொலிஸ் நிலையம் சென்று தடுத்து வைக்கப்பட்ட சிறை கூண்டின் முன்படுத்திருந்தது.

இச்சம்பவம் புலத்சிங்கள, மொல்காவவில் இடம்பெற்றுள்ளது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பொலிஸார் சிறைகூண்டின் அருகே ஒரு நாய் கிடப்பதைக் கண்டு நாயை விரட்ட முயன்றனர், ஆனால் நாய் மீண்டும் மீண்டும் அறைக்கு சென்று பதுங்கியிருந்தது.

பின்னர் நடத்திய விசாரணையில், பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட புலத்சிங்கல மொல்காவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிப்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட போது ஒரு கிலோமீற்றருக்கும் மேலாக ஜீப்பைப் பின்தொடர்ந்து சென்ற இந்த நாய், சிறைச்சாலைக்கு முன்னால் காத்திருந்தது பொலிஸ் அதிகாரிகளின் நெஞ்சில் சற்றே வேதனையை வரவழைத்ததுடன், இரும்புக் கம்பிகள் வழியாக எஜமானனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
பொலிஸ் அதிகாரிகள் நாய்க்கு பல்வேறு உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்தனர்.

இதனை கவனித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த சில்வா அலுவலகத்திற்கு வந்து, பொலிஸ் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறையின் கதவை திறந்தவுடன், நாய் பிந்து உடனடியாக தனது உரிமையாளரிடம் ஓடிச்சென்று தனது முன் பாதங்களை வைத்தது. உரிமையாளரின் அரவணைத்தார்.

இதனையடுத்து அந்த நபரை வீட்டில் பிரச்சினை ஏற்படுத்வேண்டாம் என கடுமையாக எச்சரித்த நிலைய பொலிஸ் அதிகாரி பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.




Previous Post Next Post


Put your ad code here