யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் புதிய பீடாதிபதியாக சமஸ்கிருதத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சர்வேஸ்வர ஐயர் பத்மநாபன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட ஆலயமாகவும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிலாபம் முன்னேச்சரம் மற்றும் நல்லூர் சிவன் ஆலயம் ஆகியவற்றின் தர்ம கர்த்தாவுமான இவர் சம்ஸ்கிருதத்துறையில் மிகுந்த புலமை மிக்கவர் ஆவார்.
பிராமண குலத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு ஆன்மீக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன் நூல்கள் பலவற்றின் தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.