செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டுவிழா..!!!


செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 32 வது ஆண்டு விழாவும் விளையாட்டுப் போட்டியும், கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானம் மற்றும் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் பிரதான மண்டபம் ஆகிய இடங்களில் இடம்பெற்றது.

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தலைவர் கெ.பிரகாஷ் மற்றும் விளையாட்டு கழக தலைவர் கு.திருக்குமரன் ஆகியவர்களின்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சிறப்பு விருந்தினராக யாழ். மாநகரசபை உறுப்பினர் ப.தர்ஷானந் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு நிறுவனத்தின் நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றன.











Previous Post Next Post


Put your ad code here