யாழ். சம்புநாதஸ்வரர் ஆலய சிவலிங்கம் திருட்டு..!!!


யாழ்ப்பாணம் மாதகல் சம்பில்துறை சம்புநாதஸ்வரர் ஆலயத்தின் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடப்பட்டுள்ளது.

இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் மூல மூர்த்தியான லிங்கேஸ்வரையே திருடி செல்லப்பட்டுள்ளது.

ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி,வி, கண்காணிப்பு கமராவினை பரிசோதித்த போது , பூசகர் போன்ற தோற்றத்தில் ஆலயத்தினுள் உட்புகுந்த நபர் ஒருவரே சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலயத்தின் அருகில் கடற்படை முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post


Put your ad code here