வெளிநாடு செல்லும் பெண்களுக்கான அறிவிப்பு..!!!


வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

உலக தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களை உருவாக்கும் வகையில், கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், மூன்றாம் நிலை கல்வி மூலம் உள்ளூர் மற்றும் உலக சந்தைக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் வெலுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு சமூக காப்புறுதி முறையை அறிமுகப்படும். அதன்படிஇ ஊழியர்ககள் வேலை இழந்தால், அவர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் மேலும் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here