Thursday 8 December 2022

இன்றைய ராசிபலன் - 08.12.2022 ..!!!

SHARE


மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உதவிகேட்டு தொந்தரவு தருவார்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியருடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்தும் தருவார்கள். சாதிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உணர்வுகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அந்தஸ்து உயரும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியது இருக்கும் நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
SHARE