32 ஆயிரம் பேரை நிரந்தர அரச சேவையில் இணைத்துக்கொள்ள திட்டம்..!!!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது பல துறைகளிலும் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட 32 ஆயிரம் பேரும் அடுத்த வருட ஆரம்பத்தில் அரசாங்க நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் நேற்று வெள்ளிக்கிழமை 9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்கள் தற்போது பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர்,

இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு தரப்பினரை வெளிநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தொழில்திறன் பரீட்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here