பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றவருமான ஒருவர் சனிக்கிழமை(10) கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி பரந்தன் சந்தியில் அதிகாலை நிறுத்திவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியமை, உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த யாழ் மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியரின் தங்கச் சங்கிலி அறுத்தமை, அதே தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேலும் ஒருவரின் தங்க சங்கிலியினை அறுத்தமை, இளவாலை பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து திருடியமை போன்ற பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய இளவாலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here