அச்சுவேலியில் நிதி சேகரிக்கப்பதாக வீட்டினுள் நுழைந்தவர் வீட்டிலிருந்த கைபேசியுடன் மாயம்..!!!


யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஊனமுற்றவர்களுக்கு என நிதி சேகரிப்பதாக வீடொன்றுக்குள் சென்றவர் , வீட்டில் இருந்த கைத்தொலைபேசியை திருடி சென்றுள்ளார்.

அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நபர் ஒருவர் , தான் ஊனமுற்றவர்களுக்காக நிதி சேகரித்து வருவதாக கூறி நிதி பெற்று வந்துள்ளார்.

அந்நிலையில் முதியவர் ஒருவர் தனிமையில் இருந்த வீட்டிற்கு சென்ற அந்நபர் நிதி கோரியுள்ளார். அதற்கு முதியவர் 100 ரூபாய் நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

அந்த தொகை காணாது குறைந்த தொகையே 500 ரூபாய் தான் வழங்கலாம் என கூறியுள்ளார். முதியவர் உள்ளே சென்று 500 ரூபாயை வழங்கிய போது , அதனை பெற்றுக்கொண்டவர் , குடிப்பதற்கு நீர் தருமாறு கோரியுள்ளார்.

முதியவர் தண்ணீர் எடுக்க சென்ற போது , அந்நபர் வீட்டில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசியை அபகரித்து தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here