தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்று சனிக்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் (யாழ் எம்.ஜி.ஆர்) துணைவியார் இலட்சுமி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ராஜேந்திரம் செல்வராஜா உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் அமரர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் (யாழ் எம்.ஜி.ஆர்) குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், பொதுமக்கள், கல்வியங்காடு சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.