கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல இடங்களில் இன்று (28) முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் 20 லொறிகள் மூலம் முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
முட்டை சம்மேளனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் 20 லொறிகளில் 4 இலட்சத்துக்கும் அதிகமான முட்டைகளை கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news