இந்தியத் துணைத் தூதரகமும் நல்லூர் சைவைத் தமிழ் பண்பாட்டுக் கலைக் கூடலும் யாழ் வணிகர் கழகமும் இணைந்து நடாத்தும் மார்கழி இசை விழா நேற்று (27.12.2022) மாலை 5.00. மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் நடன ஆற்றுகை , கீதவாகினி இசைக் கல்லூரியின் வித்திய இசை, அனுராகம் கவின் கலை அகத்தின் வீணை இசை குமரன் குழுவினரின் நாதசங்கமம் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அரசியல்வாதிகள் கல்வியலாளர்கள் இசை ஆர்வலர்கள் ஆகியோர் பங்குபற்றியதுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றன. இவ் இசை விழாவானது இன்றும் (28.12.2022) நாளையும் (29.12.2022) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.தர்மினி