நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 99 மில்லியன் (9.9 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 25 மில்லியன் (2.5 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மூன்றாவதாக அம்மா பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விவேக் எழுதிய இந்தப்பாடலை பிரபல பாடகி சித்ரா பாடியுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
Tags:
cinema news