‘ரஞ்சிதமே’ பாடலின் புதிய சாதனை: பாடலாசிரியர் விவேக் கூறியது என்ன?


வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் இதுவரை 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் விஜய் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

சமீபத்தில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சிம்பு குரலில் வெளியான ‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.5 கோடி (25 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 3வது பாடலும் இன்று வெளியாகியுள்ளது. நேற்று ரஞ்சிதமே பாடல் 10 கோடி பார்வைகளை தாண்டியதைத் தொடர்ந்து அதன் பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறியதாவது:

ரஞ்சிதமே பாடல் 100 மில்லியனை கடந்துள்ளது. விஜய் சார் என்னை நம்பியதற்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது. என்னால் கூற முடிந்ததெல்லாம் லவ் யூ விஜய் சார். இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.


Previous Post Next Post


Put your ad code here