
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பன்னல, மாகந்துர பகுதியில் உள்ள தனியார் வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, குறித்த மாணவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news