Friday 16 December 2022

ஐஸ் போதைக்கு அடிமையாகிய மாணவியின் ஆதங்கம்..!!!

SHARE

இந்நாட்களில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு விசேடமாக மாணவிகளை யுவதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம் தொடர்பில் இந்நாட்களில் அதிகம் பேசப்படு பேசுபொருளாக காணப்பட்டு வருகின்றது.

கொழும்பில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் யுவதி ஒருவர் எவ்வாறு ஐஸ் போதைக்கு அடிமையாகினர் என்பதனை இவ்வாறு விளக்குகிறார்,
மற்றொரு முக்கிய பலியாகியுள்ளனர்.

“எனக்கு வயது 22 , நண்பரோடு பார்ட்டிக்கு போயிருந்தேன்.. அங்கு தான் முதலில் இதனைக் கண்டேன், அன்று பாவித்தது தான் இன்று வரையில் என்னால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போ அதுக்கு ஏறக்குறைய அடிமையாயிடுச்சு.. பாடசாலை முடிந்ததும் முதலில் நான் தேடுவதும் எனக்கு கொண்டு வந்து தரப்படும் ஐ ரக போதையை தான். எனக்கும் இதிலிருந்து விடுபடணும் என ஆசையாக உள்ளது.. அனால் முடியவில்லை. ஐஸ் என்பது இவ்ளோ பெரிய விஷயமா இருக்கும்னு நினைக்கல.. இதற்கு யாரும் அடிமையாக வேண்டாம், இது ஒரு சாபம்…”

மேலும், இரவு விடுதிகளில் ஐஸ் போதைப்பொருள் அதிகமாக பரவி வருவதாக இரவு கிளப் ஒன்றில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தெரிவித்திருந்தார்.

“கிளப்பில் வேலை பார்த்தேன்.. ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தும் உள்ளே வேலை செய்பவர்களை பார்த்தேன்.. 2 வருஷத்துக்கு முன்னாடி.. கொஞ்சம் கொஞ்சமா அதுக்கு அடிமையாயிடுச்சு.. ஒரு நண்பர்தான் முதலில் கொடுத்தார்.. உபயோகிக்கும் போது சாப்பிட முடியாது.. தூக்கம் வரும். உடல் பலவீனமாகிறது. வாய் வலிக்கிறது.. நாக்கு பிளக்கிறது.தொண்டையில் சளி கட்டுகிறது. கிளப்பில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு வழங்கினார்கள்.. அங்கு இந்த தொழில் செய்பவர்கள் வருவார்கள். எம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, என்ன செய்வது என்று தெரியவில்லை, இலங்கையில் இது மறைய வேண்டும்…” எனத் தெரிவித்திருந்தார்.
SHARE