கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, கண்டி மற்றும் மஹய்யாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத பாதையில் மண் சரிந்து வீதியில் தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை 10.15 மணிக்கு பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதங்களும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து நண்பகல் 12.40 மணிக்கு நானுஓயா வரையான புகையிரதங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news