மூடநம்பிக்கையால் பறிபோன 8 மாத பாலகனின் உயிர் - யாழ்.நாவாந்துறையில் துயரம்..!!!



யாழ்.நாவாந்துறையில் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருந்து எடுக்காமல் கோவிலுக்கு கூட்டிச் சென்று நுால் கட்டிவிட்டு காத்திருந்தமையால் 8 மாத குழந்தை உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.

இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையின் பின்னர், வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here