காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை..!!!


காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் காற்று மாசடைவு வீதம் அதிகமாக காணப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லை

இது ஒரு செய்மதி தரவுகளின் மூலம் எடுக்கப்பட்ட படம். கொழும்பு நகரில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த சுட்டெண் அதிகமாக காணப்படும். அந்த இடங்களில் முககவசங்கள் அணிவது நல்லது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதற்குரிய பயம் தேவையில்லை. முக கவசம் கட்டாயம் அணியதேவையில்லை. ஆனால் அணிவது தவறில்லை.

நாங்கள் மக்களை பயப்படுத்தக்கூடாது. தற்போது தாழமுக்க சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கால நிலையினால், தான் இந்த குளிர்ச்சூழல் அதிகமாக காணப்படுகின்றதே தவிர மக்கள் இந்த வளி மாசடைந்ததன் காரணமாக இந்த நிலை ஏற்படவில்லை என்பது தான் உண்மை என்றார்.
Previous Post Next Post


Put your ad code here