இன்னும் சில தினங்களில் நாம் 2023 புத்தாண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளோம். வரப்போகும் புத்தாண்டு, நமக்கும், நாட்டிற்கும், உலகுக்கும் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் உள்ளது.
அந்த வகையில் 2023 புத்தாண்டு இந்த மூன்று ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இவர்கள் வெற்றி அடைவார்கள்.
அபரிமிதமான மகிழ்ச்சியும், நிம்மதியும் இந்த ஆண்டு இவர்களுக்கு கிடைக்கும். புத்தாண்டான 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வேத ஜோதிட கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், சனி, குரு மற்றும் ராகு-கேது போன்ற பெரிய கிரகங்களின் ராசிகளில் மாற்றம் ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி இரண்டரை வருடங்கள் கழித்து கும்ப ராசியில் பிரவேசிப்பார்.
ஏப்ரல் மாதத்தில், மிகவும் மங்களகரமான தேவகுரு வியாழன் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் நுழைகிறார். இதற்குப் பிறகு மீண்டும் அக்டோபர் மாதத்தில் ராகுவின் ராசி மாற்றம் நிகழும்.
விருச்சிகம் :
2023-ம் ஆண்டு சனி உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பிரவேசிப்பார். ஜாதகத்தில் நான்காம் இடம் மகிழ்ச்சி மற்றும் தாயின் இடமாக பார்க்கப்படுகின்றது.
ஜோதிட சாஸ்திரப்படி, 2023-ம் ஆண்டு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது பொழியும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டில் நில பேரத்தில் லாபம் அதிகமாக கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு பல வாய்ப்புகள் கிடைக்கும்.
வரும் ஆண்டில் அதாவது 2023ல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். இந்த ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் நல்ல செல்வத்தைப் பெறுவீர்கள்.
மகரம் :
ஜோதிட கணக்கீடுகளின்படி, இந்த 2023 ஆம் ஆண்டில், சனி பகவான் மகர ராசியை விட்டு வெளியேறி கும்ப ராசியில் நுழைவார். சனி உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பார்.
2023ல் சனியின் சிறப்பு அருள் உங்கள் மீது இருக்கும். பணப் பலன்களைப் பெறலாம். இந்த ஆண்டு மிகவும் மங்களகரமான ஆண்டாக இருக்கும். கௌரவமும் உயர் பதவியும் உயரும். மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆண்டு முழுவதும் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
மிதுனம் :
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில், குரு வியாழன் மிதுன ராசியிலிருந்து பதினொன்றாவது வீட்டில் நுழைவார். ஜாதகத்தில் பதினொன்றாவது வீடு வருமானம் மற்றும் லாப ஸ்தானமாக கருதப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் 2023-ம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. இவர்களின் பொருளாதார நிலை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
மொத்தத்தில், குரு மற்றும் சனியின் சிறப்பு ஆசிகள் ஆண்டு முழுவதும் உங்களுக்கு இருக்கும். இந்த ஆண்டு அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள்.
Tags:
Rasi Palan