![]() |
file image |
கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளம் சேவீஸ் வீதியில் முதியவர் ஒருவர் தமது பெறாமகனான விசேட தேவையுடைய இளைஞனுடன் நேற்று(19) நடந்து சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சொப்பின் பையில் ஒரு தொகை பணம் வீதியில் கிடந்ததுடன் அதனை கண்டெடுத்த குறித்த இளைஞர் தமது சிற்றப்பாவான முதியவரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை எடுத்துச் சென்று நேற்று(19) கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரிடம் ஒப்படைத்த போதிலும் எவரும் உரிமை கோரி வராததால் அந்தப் பணத்தை இன்று(20) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக அந்த முதியவர் தெரிவித்தார்.
உரிய ஆதாரங்களைக் காட்டி உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி பொலிஸார் அறிவித்துள்ளனர்.