குடும்பத்தலைவரை துரத்திச் சென்று கொன்ற கும்பல்; கோப்பாயில் பயங்கரம்..!!!



கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார்.

கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்)  நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் கூறினர்.

ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என அழைக்கப்படுவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

கோப்பாய் இராசபாதையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

முகமூடியணைந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்து தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here