மட்டக்களப்பில் அந்தோனியாரின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு..!!!



மட்டக்களப்பு கூலாவடி சந்தியில் உள்ள அந்தோனியார் சொரூபத்தில் இருந்தின் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும் அதிசயச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சொரூபத்தின் ஒரு கண்ணில் மாத்திரம் இருந்து கண்ணீர் வடியும் அதிசயத்தைக் காண மக்கள் திரண்டு இருந்தனர்.

நேற்று இரவு எட்டு மணி அளவில் இந்த அதிசயச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமை போல்.இந்த சொரூபத்துற்கு அருகாமையில் வீட்டில் இருக்கும் நபர் மாலை மற்றும் விளக்குகளை ஏற்றுவது வழமை. ஏற்றிய பின்னர் இவர் வணங்கி விட்டு செல்லும் போது, அந்தோனியாரின் கண்களை அவதானித்தபோது அதிலிருந்து நீர் வரும் அதிசயத்தை கண்டு வணங்கியுள்ளார்.

இதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கும் இவ்விடயம் தெரியவந்ததை அடுத்து அதிசயத்தை காண மக்கள் திரண்டு இருந்தனர்.அந்தோனியாரின் வலது கண்ணில் இருந்து நீர் கசிகின்ற அதிசயத்தை காண மக்கள் இன்றும் அப்பகுதிக்கு சென்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.



Previous Post Next Post


Put your ad code here