இலங்கையில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் முறை கையடக்க தொலைபேசிகளின் ஊடாக அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை.
Tags:
sri lanka news