
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் எந்தவொரு பதவியிலும் பணியாற்றும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உயர்கல்விக்காக தற்போது காணப்படும் பெருமளவிலான ஆசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் எஞ்சிய வெற்றிடங்களுக்கு ஏனைய பட்டதாரிகளும் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news