யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் போராட்டம்..!!!


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் இன்றைய தினம் புதன்கிழமை நண்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் சம்பளத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பினை வெளியிடும் முகமாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த அரை நாள் வேலை நிறுத்தம் இடம்பெற்று வருகிறது.







Previous Post Next Post


Put your ad code here