யாழ். மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கான கலந்துரையாடல்..!!!


யாழ் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ் போதனா வைத்திய சாலையில் மருத்துவ கழிவுகளை உரிய முறையில் அழிப்பதற்கு யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் நேற்றைய தினம் யாழ் மாநகர சபையில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இது தொடர்பான கலந்துரையாடலில் யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மாநகர சபையின் ஆணையாளர் மாநகர சபையின் பொறியியலாளர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தற்போது தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன எனினும் யாழ்ப்பாண வைத்திய சாலையானது யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள அனைவரது வைத்திய தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு வைத்தியசாலை என்பதனால் அதிகளவு மருத்துவ கழிவுகள் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படுகின்றன. எனவே குறித்த கழிவுகளை யாழ்ப்பாண மாநகரத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு இடத்தில் பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அழிப்பதற்கு ஏற்ற ஒரு இடத்தினை தெரிவு செய்வது தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டது.
Previous Post Next Post


Put your ad code here