Wednesday 1 February 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அதிசிறப்பு வர்த்தமானி வெளியீடு..!!!

SHARE

2023ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் அதிசிறப்பு வர்த்தமானி மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு தேர்தல் தினத்தன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 38(1)(c) துணைப்பிரிவின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வர்த்தமானியை வெளியிடுகின்றனர்.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 59 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
SHARE