மீண்டும் மின்வெட்டு..!!!


மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இந்நாட்களில் மின்வெட்டை நிறுத்துவதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் கிடைக்காததால் மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தை பயன்படுத்த பழகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here