ஒரு வேட்பாளர் தேர்தலில் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லாத புதிய தேர்தல் முறையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் இளைஞர் குழுவுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் இளைஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் வரவிருக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடினார்.
Tags:
sri lanka news