நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2023 பிப்ரவரி 19 முதல் 2023 பிப்ரவரி 25 வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பண பிரச்சனைகள் நீங்கும். வேலையில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வணிகர்கள் லாபத்தைப் பெற கடுமையாக போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: வெள்ளி
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்கப்படும். தொழிலதிபர்களின் பணப் பிரச்சனைகள் நீங்கும். பணப் பற்றாக்குறையால் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக இந்த வாரத்தில் முடியும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரத்தில் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் வேலையில் பிஸியாக இருப்பீர்கள். இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மனக்கவலைகள் இருந்தால், அதை மறந்து வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்களால் அதிகம் சேமிக்க முடியும். வாரத்தின் நடுப்பகுதியில் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் திடீர் குறைவு ஏற்படும். மேலும் உங்களுக்கு இருந்த பழைய பிரச்சனைகள் இந்த வாரத்தில் மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உங்களின் முக்கிய வேலைகளில் தடைகள் ஏற்படலாம். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வாரத்தில் பட்ஜெட்டை மனதில் வைத்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில், உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நாள்: புதன்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். வேலையைத் தேடிக் கொண்டிருந்தல், இந்த வாரத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவலை மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வார இறுதியில் கடன் வாங்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும். மறுபுறம் வணிகர்கள் பெரிய லாபத்தைப் பெறலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், உங்கள் மீது கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் இருப்பவர்களுக்கு முக்கியமான வாரமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாரத்தில் நல்ல வேலை கிடைக்கலாம். வணிகர்கள் இக்காலத்தில் சிறிய நன்மைகளைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் எந்த ஒரு நிதி பரிவர்த்தனையையும் சிந்திக்காமல் செய்யாதீர்கள். உங்கள் வாழ்கைத் துணையுடனான உறவில் பிரச்சனை ஏற்படலாம். ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வியாபாரிகளுக்கு பரபரப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் செலவு அதிகமாக இருக்கும். குழந்தைகளின் படிப்புக்கு அதிக பணம் செலவழிக்க நேரிடும். இந்த வாரம் காதல் விஷயத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வான நீலம்
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! நீங்கள் வங்கியில் வேலை செய்து வந்தால், இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வணிகர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வார இறுதியில், நீங்கள் மதிப்புமிக்க ஒன்றை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பேச்சிலும், நடத்தையிலும் இனிமையாக இருங்கள். வேலையைப் பொறுத்தவரை, வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். ஆனால் அதன் பின் நன்றாக இருக்கும். வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தசை பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நாள்:சனிக்கிழமை
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சாதகமாக இருக்கும். நற்செய்தியால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புகள் கிடைக்கும். பரம்பரை தொழில் செய்து வந்தால், வீட்டின் பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். நிதி நிலை உயரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அலுவலகத்தில் சில பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்நிலையில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான தகராறு ஏற்படலாம். உங்கள் துணையுடன் உறவை வலுவாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவ்வளவு நன்றாக இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நாள்: புதன்
Tags:
Rasi Palan