யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை சிவா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரிக்கு அருகில் மேற்படி விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைந்துள்ள சிவா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.
மேற்படி இரத்ததான முகாமில் 37 பேர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.