யாழ் போதனா இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ் போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாமையால் அடுத்த இரத்ததான முகாம் எதிர்வரும் 4ந் திகதியே நடைபெறவுள்ளதாகவும் , அதுவரை நோயாளர்களுக்கான குருதியை வழங்க போதாமை நிலவுவதாகவும் அறிவித்துள்ளது.

எனவே ஏற்கனவே குருதிக்கொடை வழங்கி நான்கு மாதங்கள் பூர்த்தியான குருதிக்கொடையாளர்களும் புதிய குருதிக் கொடையாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ் இரத்த வங்கி மேலும் தமது அவசர நிலமையினை குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here