பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பேக்கரி தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீள கட்டியெழுப்புவதற்கு பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதே ஒரே தீர்வாகும்.
இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
தற்போது 150-180 ரூபா வரையில் விற்பனையாகின்ற பாண் றாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, என்று அவர் கூறியுள்ளார்.
Tags:
sri lanka news