யாழின் வரலாற்று பிரசித்திபெற்ற இடத்துக்கு செல்லத் தடை..!!!


வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளன.

இதனால் அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்










Previous Post Next Post


Put your ad code here