கிளிநொச்சி - பளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இயக்கச்சியிலிருந்து பளை நோக்கி மாணவர்களை ஏற்றிச்சென்ற கெப் வாகனம் புதுக்காட்டு சந்தியை அண்மித்த பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக சென்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது.
காலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news