நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் கெடட்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் வெளியேறும் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news