முல்லைத்தீவில் 35 இலட்சம் ரூபா கள்ள நோட்டு மற்றும் அச்சடிக்கும் இயந்திரத்துடன் ஒருவர் கைது..!!!

file image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

42 வயதுடைய குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரமொன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700ம் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பொலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here