
டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஒப்ப, சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.
வட்டிவீதங்களின் அதிகரிப்பு காரணமாக வாகனங்களின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் கடந்த காலங்களில் வாகன விலைகள் குறைவடைந்து வந்த நிலையில், தற்போது டொலர் பெறுமதி குறைவடைந்துள்ளதால், சொகுசு வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.