
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் உயர்வடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களில் ஏனைய அனைத்து முக்கிய நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.