இலங்கைக்கான சேவையினை முன்னெடுக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கும் விமான பயண சீட்டு விலையை குறைக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் வீழ்ச்சியை கருத்திற் கொண்டே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு சந்திப்பின் போது, விமானப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் விமானக் கட்டணங்கள் ஏற்கனவே 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறெனினும் அந்த விலையினை மேலும் குறைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், இதற்கு விமான நிறுவனங்களும் ஒப்புக் கொண்டன.
Tags:
sri lanka news