சாவகச்சேரியில் விபத்து..!!!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது முன்னால் வந்த கப்ரக வாகனத்தோடு பலமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கப்வாகனம் முற்றாகச் செய்தமடைந்தது.

இவ் விபத்தை அடுத்து டிப்பர் சாரதி டிப்பர்வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். விபத்தில் கப்சாரதிக்கு தெய்வாதீனமாக எந்த காயங்களும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக சாவகச்சேரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post


Put your ad code here