திடீரென மயங்கி வீழ்ந்த மாணவன் உயிரிழப்பு..!!!



பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், மாணவன் ஒருவன் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக சுருண்டு வீழ்ந்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here