உணவகங்களில் பால் தேனீரின் விலையை நாளையுடன் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை (27) முதல் பால் தேனீரின் விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அது நாளை முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news