வரும் வாரம் டொலர் பெறுமதி குறையும் சாத்தியம்..!!!


கொழும்பில் வங்கிகளுக்கு அப்பால் நாணய பறிமாற்றில் ஈடுபடுகின்ற பல்வேறு நிலையங்களில் இன்று டொலரின் விலை 340 ரூபாவாக குறைவடைந்திருந்தது.

நாணய சந்தையிலும் நேற்றும், நேற்றுமுன்தினமும் மிகப்பெரியளவில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நேற்றைய தினம் மத்தியவங்கியால் வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களில், டொலர் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி கூடி இருந்தாலும், இடைநிலை பெறுமதியில் வீழ்ச்சிப் போக்கை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் அடுத்த வாரம் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது கடன் கொடுப்பனவு தொகையாக 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அவற்றின் அடிப்படையில் எதிர்வரும் வாரம் டொலரின் பெறுமதி மீண்டும் குறைவடைவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here