சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை..!!!


எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை அவதானித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொது போக்குவரத்து சேவை பேருந்துகள் சாதாரண, அரை சொகுசு மற்றும் சொகுசு வகைகளின் கீழ் இயங்குகின்றன.

அரை சொகுசு பேருந்துகளில் சாதாரண கட்டணத்தை விடவும், சொகுசு பேருந்துகளில் அரை சொகுசு பேருந்து கட்டணத்தை விட இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரை சொகுசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அப்படி இருந்தும், அரை சொகுசு வகைகளின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகள், பேருந்தில் உள்ள இருக்கைகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலித்து பயணிகளை ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் பயணிகளுக்கு பயனளிக்காத அரை சொகுசு சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், தற்போது அரை சொகுசுப் பேருந்துகளாக இயங்கும் பேருந்துகளை குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக அல்லது வழக்கமான சேவைகளாக மாற்றுமாறு பேருந்து சங்கங்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையினால் இயக்கப்படும் 4,300 பேருந்துகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் நீண்ட தூர சேவைப் பேருந்துகளாகும். இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே அரை சொகுசு சேவைகளாக இயக்கப்பட்டன, அந்தப் பேருந்துகளும் அந்தப் பிரிவில் இருந்து அகற்றப்படும் என்று இலங்கை பயணச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) பண்டுக ஸ்வரனஹன்ச தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here