திருநெல்வேலியில் அடித்து நொருக்கப்பட்ட சிறுவர் இல்லம்..!!!


திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் இன்று திங்கட்கிழமை(27) மாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு பகுதி என்பன சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்ல விடுதி காப்பாளரொருவர் இன்று நீதிமன்ற உத்தரவின் படி பதவி விலக்கப்பட்ட நிலையில் அவரின் தூண்டுதலில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களால் விடுதியின் பிரதான அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




Previous Post Next Post


Put your ad code here