கிளிநொச்சியில் அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி முகாம்..!!!


அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை இந்து மகாசபையின் ஏற்பாட்டில் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர்களால் அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(18) கிளிநொச்சியில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதான வளவாளர்களாக அரசாங்க சட்ட வரைஞர் திணைக்களத்தின் சட்ட வரைஞர் சட்டத்தரணி செல்வகுணபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் கலந்துகொண்டு அரச காணிகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலான இலவச சட்ட ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உதவி பிரதேச செயலாளர், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்களுடன் 50ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.







Previous Post Next Post


Put your ad code here