யாழ்.மாநகரசபை தீயணைப்பு வாகனத்தின் சில்லுக்குள் சிக்கி தீயணைப்பு படை வீரர் படுகாயம்..!!!


யாழ்.மாநகர சபை தீயணைப்பு வாகன சில்லினுள் சிக்குண்ட தீயணைப்பு படை வீரரொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தீயணைப்பு வாகனம் ஹான்ட் பிரேக் போடப்படாமல் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனம் மெது மெதுவாக நகரவே அதனை கண்ட தீயணைப்பு படை வீரரொருவர் அதனை நிறுத்துவதற்காக கல் ஒன்றை சில்லுக்கு முன்பாக வைக்க முயன்றுள்ளார். இதன்போது தடுமாறி சில்லுக்குள் அகப்பட்டு படுகாயமடைந்தார்.


படுகாயமடைந்த தீயணைப்பு படை வீரர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here